இந்தியா
பா.ஜ.க.வின் மக்களவைத் தேர்தல் அறிக்கை இன்று தில்லியில் வெளியிடப்பட்டது. அக்கட்சியின் தலைவர் நட்டாவும் பிரதமர் மோடி, மைய அமைச்சர்கள் அமித்ஷா, இராஜ்நாத்சிங் ஆகியோரும் இதை வெளியிட்டனர்.
இதில் முக்கியமாக, ஒரே நாடு ஒரே தேர்தல் முறை கொண்டுவரப்படும் எனும் உறுதிமொழி இடம்பெற்றுள்ளது.
மற்ற முக்கிய அம்சங்கள்:
* ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின்படி 70 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் பயன்.
* 5 இலட்சம் ரூபாய்வரை இலவச மருத்துவம் பார்த்துக்கொள்ளலாம்.
* முத்ரா கடனுதவித் திட்டம் ரூ.10 இலட்சத்திலிருந்து ரூ.20 இலட்சமாக அதிகரிக்கப்படும்.
* பொது சிவில் சட்டம் கொண்டுவரப்படும்.
* நாடு முழுவதும் மாணவர்களுக்கு நிரந்தர அடையாள எண் வழங்கப்படும்.