டெலிட் பண்ண மாட்டேன்! - தர்மேந்திர பிரதானை விளாசும் பா.ஜ.க. எம்.பி. மகள்!

Aparajita sarangi and her daughter archita
அபராஜிதா சாரங்கி, அவர் மகள் ஆர்ச்சிதா சச்சின் ரஹர்
Published on: 

மத்திய கல்வி அமைச்சரின் பதவி விலகலை வரவேற்கும் வகையில் புவனேஷ்வர் பா.ஜ.க. எம்.பி.யின் மகள் பதிவிட்ட கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

நீட் தேர்வில் செய்யப்பட்ட முறைகேடுகளுக்கு எதிரான மாணவர் போராட்டத்தின் விளைவாக மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகினார். அதனை வரவேற்கும் வகையில் புவனேஷ்வர் பா.ஜ.க. எம்.பி. அபராஜிதா சாரங்கியின் மகள் ஆர்ச்சிதா சச்சின் ரகர் சமூக ஊடகத்தில் தனது கருத்தினைப் பதிவிட்டார்.

ஆர்ச்சிதா சச்சின் ரஹர், "நீட் தேர்வு கசிவு தொடர்பான முறைகேடுகளுக்கு எதிராக மாணவர்கள் நடத்திய போராட்டங்களுக்கு மத்தியில் தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்துள்ளார்." என்று குறிப்பிட்டு இருந்தார்.

ஆனால், அவரின் தாயார் அபராஜிதா சாரங்கி உட்பட பல பா.ஜ.க. நாடாளுமன்ற உறுப்பினர்களும் தர்மேந்திர பிரதானுக்கு ஆதரவாக நிற்பதாக கருத்துகளை வெளியிட்டுள்ளனர்.

அதனை நீக்கக்கோரி பலர் அறிவுறுத்தியும், அவர் நீக்க மறுத்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடர: Facebook, Twitter, Youtube, Instagram

logo
Andhimazhai
www.andhimazhai.com