பா.ஜ.க. தலைமையகம், புதுதில்லி
பா.ஜ.க. தலைமையகம், புதுதில்லி

இன்று மாலை 6 மணிக்கு பா.ஜ.க. முதல் வேட்பாளர் பட்டியல்?

மக்களவைத் தொகுதிக்கான பா.ஜ.க.வின் முதல் வேட்பாளர் பட்டியல் இன்று மாலையில் வெளியாகும் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன. 

நாடு முழுவதும் தேர்தல் அறிவிப்புக்கான எதிர்பார்ப்பு இருந்துவரும் நிலையில், ஆளும் பா.ஜ.க., காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணி கட்சிகள் தொகுதிப் பங்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெற்றுவருகிறது. 

தமிழ்நாட்டிலும் தொகுதிப் பேச்சுவார்த்தையை மூன்று அணிகளும் நடத்திவருகின்றன. இந்த நிலையில், அகில இந்திய அளவில் பா.ஜ.க.வின் முதல் வேட்பாளர் பட்டியல் இன்று மாலை 6 மணியளவில் வெளியாகும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. 

அதில், 155 வேட்பாளர்கள்வரை அறிவிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக பா.ஜ.க. தலைமை வட்டாரங்களை மேற்கோள் காட்டி தில்லி ஊடகங்கள் தெரிவித்துள்ளன. 

தமிழ்நாட்டைச் சேர்ந்த சிலரின் பெயர்களும் இந்தப் பட்டியலில் இடம்பெறக் கூடும் என்றும் கூறப்படுகிறது. 

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com