பிரதமர் மோடி
பிரதமர் மோடி

மக்களவைத் தேர்தல்: பா.ஜ.க. 370 இடங்களுக்கு மேல் கைப்பற்றும்! – மோடி நம்பிக்கை

மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க. 370 இடங்களுக்கு மேல் கைப்பற்றும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

மத்தியப் பிரதேசத்தின் ஜபுவா மாவட்டத்தில் பழங்குடியின சமூகத்தினரின் பொதுக்கூட்டத்தில் இன்று உரையாற்றிய பிரதமர் மோடி, கடந்த தேர்தலை விட ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் கூடுதலாக 370 வாக்குகள் பெற்று, பா.ஜ.க. 370 இடங்களில் வெற்றி பெற வேண்டும்.

நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர்களும் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு 400 இடங்களுக்கு மேல் கிடைக்கும் என்று கூறுகிறார்கள். பா.ஜ.க. 370-ஐ தாண்டும் என்று நான் உறுதியாக நம்புகிறேன்.

கடந்த மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க. 303 இடங்களை கைப்பற்றியது என்பது குறிப்பிடத்தக்கது.

logo
Andhimazhai
www.andhimazhai.com