பா.ஜ.க. எம்.பி. ஹர்ஷவர்தன் அரசியலிலிருந்து விலகினார்!

ஹர்ஷ்வர்தன்
ஹர்ஷ்வர்தன்
Published on

மக்களவைத் தேர்தலையொட்டி பா.ஜ.க.வின் முதல்கட்ட வேட்பாளர் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. அந்தப் பட்டியலில் பா.ஜ.க. எம்.பி.யும் சுகாதாரத் துறை முன்னாள் அமைச்சருமான ஹர்ஷ்வர்தன் பெயர் இடம்பெறாத நிலையில், அவர் அரசியலிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், 30 ஆண்டுகால தனது அரசியல் பயணத்தை நினைவு கூர்ந்துள்ளார். மேலும் அனைத்து கட்சித் தொண்டர்கள் மற்றும் சக ஊழியர்களுக்கு அவர் நன்றி தெரிவித்துள்ளார்.

ஐந்து முறை எம்.எல்.ஏ.வாகவும், இரண்டு முறை எம்.பி.யாகவும் இருந்தவர், மத்திய சுகாதார அமைச்சராகவும், மத்திய சுற்றுச்சூழல் அமைச்சராகவும் பணியாற்றியுள்ளார்.

ஹர்ஷ்வர்தன் தற்போது எம்.பி.யாக உள்ள டெல்லி சாந்தினி சவுக் தொகுதிக்கு பிரவீன் என்பவரை வேட்பாளராக பா.ஜ.க. நேற்று அறிவித்தது.

முன்னதாக, முன்னாள் கிரிக்கெட் வீரரும், பா.ஜ.க. டெல்லி எம்.பி.யுமான கௌதம் கம்பீர், அரசியல் பணிகளிலிருந்து விடுவிக்குமாறு வலியுறுத்திய நிலையில், தற்போது மேலும் ஒரு டெல்லியைச் சேர்ந்த பாஜக எம்.பி. அரசியலிலிருந்து விலகியிருப்பது குறிப்பிடத்தக்கது.

logo
Andhimazhai
www.andhimazhai.com