மோகன் மஜி
மோகன் மஜி

ஒடிசாவின் புதிய முதல்வராக மோகன் மஜி தேர்வு!

ஒடிசா மாநிலத்தின் புதிய முதலமைச்சராக மோகன் மஜி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலோடு சேர்த்து ஒடிசா சட்டப்பேரவைக்கும் தேர்தல் நடைபெற்றது. இதில், மொத்தமுள்ள 147 தொகுதிகளில் பா.ஜ.க. 78 தொகுதிகளில் வெற்றிபெற்று அறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைப்பதற்கான உரிமையைப் பெற்றது.

தேர்தல் முடிவுகள் வெளியாகி இன்றுடன் ஒன்பது நாள்கள் ஆகியும், புதிய முதலமைச்சர் யார் என்ற கேள்வி இருந்துவந்தது. இந்நிலையில் இன்று ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில், பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் பா.ஜ.க. எம்.எல்.ஏ.கள் கூட்டம் நடைபெற்றது. இதில், மோகன் மஜி முதலமைச்சராகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார். பழங்குடி இனத்தைச் சேர்ந்த இவர், கியோஞ்சர் தொகுதியிலிருந்து சட்டமன்ற உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டவர்.

மேலும், கேவி சிங் தியோ, பிரவதி பரிதா ஆகியோர் துணை முதலமைச்சர்களாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்

logo
Andhimazhai
www.andhimazhai.com