புத்ததேவ் பட்டாச்சார்யா, மேற்கு வங்க முன்னாள் முதலமைச்சர்
புத்ததேவ் பட்டாச்சார்யா, மேற்கு வங்க முன்னாள் முதலமைச்சர்

மேற்கு வங்க முன்னாள் முதல்வர் புத்த தேவ் இயற்கை எய்தினார்!

Published on

மேற்குவங்க முன்னாள் முதலமைச்சரும் பொருளாதார வல்லுநருமான புத்ததேவ் பட்டாச்சார்யா கொல்கத்தாவில் இன்று காலமானார். அவருக்கு வயது 80. 

நீண்ட காலமாக மேற்குவங்க முதலமைச்சராகப் பணியாற்றிய ஜோதிபாசுவை அடுத்து, அந்தப் பதவிக்கு வந்தவர், புத்ததேவ். 

கடந்த 2001ஆம் ஆண்டு முதல் 2011ஆம் ஆண்டுவரை தொடர்ந்து இரண்டு முறை முதலமைச்சராக புத்ததேவ் பதவிவகித்தார்.

அண்மைக் காலமாக, முதுமை காரணமாக சில உடல் உபாதைகளால் பாதிக்கப்பட்டிருந்த அவர், இன்று காலையில் காலமானார். 

அக்கட்சியின் மாநிலச் செயலாளர் முகமது சலீம் இத்தகவலைத் தெரிவித்தார். 

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram

logo
Andhimazhai
www.andhimazhai.com