பிரதமர் மோடி
பிரதமர் மோடி

விவசாயிகளை கை தூக்கிவிடும் பட்ஜெட்! - பிரதமர் பாராட்டு

நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்பட்ட இடைக்கால பட்ஜெட், விவசாயிகளை கை தூக்கிவிடும் பட்ஜெட் என்று பிரதமர் மோடி பாராட்டியுள்ளார்.

இது தொடர்பாக பிரதமர் மோடி கூறியதாவது:

மத்திய பட்ஜெட் சிறப்பானது; அனைத்து தரப்பினரையும் மேம்படுத்தும் வகையில் உள்ளது. இளையோருக்கும், பெண்களுக்கும் நலன் பயக்கும் பட்ஜெட்டாக அமைந்துள்ளது. எதிர்கால இந்தியா என்ற தாரக மந்திரத்திற்கு வலுசேர்க்கும் வகையில் அமைந்துள்ளது. இதுவரை 4 கோடி வீடுகள் ஏழைகளுக்காக கட்டித்தரப்பட்டுள்ளன. இன்னும் 2 கோடி வீடுகள் கட்டப்பட உள்ளன. பல்வேறு வாய்ப்புகள் திட்டங்கள் மூலம் ஏராளமான இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைத்துள்ளது.

புதிய தொழில் துவங்குவதற்கான பொன்னான வாய்ப்புகள் பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ளன. உள்கட்டமைப்புக்கு ஒதுக்கிய தொகை வேகமான வளர்ச்சி, அதிக வேலைவாய்ப்புகளை உருவாக்கும். அங்கன்வாடி ஊழியர்களுக்கு காப்பீடுகள் கொடுக்கப்பட்டது மிகப்பெரிய பாதுகாப்பை வழங்கியுள்ளது. சோலார் தகடுகள் அமைப்பதன் மூலம் ஒரு கோடி வீடுகள் இலவச மின்சார சேவையை பெற முடியும். ஏழைகளையும், விவசாயிகளையும் கை தூக்கிவிடும் பட்ஜெட் இது. வரலாற்று சிறப்புமிக்க பட்ஜெட்டின் பலன்கள் மக்களுக்கு நேரடியாக கிடைக்கும் என உறுதியளிக்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com