57 புதிய கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் தொடங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

கேந்திரிய வித்யாலயா பள்ளி, பொன்மலை, திருச்சி
கேந்திரிய வித்யாலயா பள்ளி, பொன்மலை, திருச்சி
Published on

நாடு முழுவதும் 57 புதிய கேந்திரிய வித்யாலயா பள்ளிகளை தொடங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

இதில் 20 பள்ளிகளை இதுவரை கேந்திரிய வித்யாலயா பாள்ளிகள் இல்லாத மாவட்டங்களில் அமைக்கவும், 14 கேந்திரிய வித்யாலயா பள்ளிகளை முன்னேறி வரும் மாவட்டங்களில் அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

மொத்தம் 17 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் அமைக்கப்படவுள்ள இந்த புதிய பள்ளிகள் மூலம், 87 ஆயிரம் மாணவர்களுக்கு குறைந்த கட்டணத்தில் தரமான கல்வியை வழங்கவும் அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதற்கான மொத்த செலவு ரூ.5,862.55 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது. இதில் ரூ.2,585.52 கோடி மூலதனச் செலவாகவும், ரூ.3,277.03 கோடி செயல்பாட்டுச் செலவாகவும் இருக்கும்.

இந்த பள்ளிகள் 2026-27 முதல் ஒன்பது ஆண்டுகளில் படிப்படியாக துவங்கப்படவுள்ளன. மேலும், தேசிய கல்விக் கொள்கை 2020-ன் கீழ், முதன்முறையாக இப்பள்ளிகளில் பால்வாடி (3 வயது தொடக்கக் கல்வி) வகுப்புகள் அறிமுகப்படுத்தப்படுகின்றன.

logo
Andhimazhai
www.andhimazhai.com