மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர் தேர்தல் பிரச்சாரம் நிறைவு
மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர் தேர்தல் பிரச்சாரம் நிறைவு

மத்தியப்பிரதேசம், சத்தீஸ்கர்- தேர்தல் பிரச்சாரம் முடிந்தது; 17இல் வாக்குப்பதிவு!

மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர் மாநிலங்களுக்கான தேர்தல் பிரச்சாரம் இன்று மாலையுடன் நிறைவடைந்தது.

சத்தீஸ்கர் மாநிலத்தில் 20 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு கடந்த நவம்பர் 7 ஆம் தேதி முதற்கட்டத் தேர்தல் நடைபெற்றது. மீதமுள்ள 70 தொகுதிகளுக்கு வருகிற நவம்பர் 17 ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது.

அதேபோல, 230 சட்டப்பேரவைத் தொகுதிகளைக் கொண்ட மத்தியப் பிரதேசத்தில் நவம்பர் 17ஆம் தேதி ஒரே கட்டமாகத் தேர்தல் நடைபெற உள்ளது. இங்கு ஆளும் பா.ஜ.க.வுக்கும் எதிர்க்கட்சியான காங்கிரஸுக்கும் இடையே கடுமையான போட்டி நிலவுகிறது. 230 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு மொத்தம் 2,533 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

இரு மாநிலங்களிலும் தேர்தல் பிரசாரம் இன்று மாலையுடன் நிறைவு பெற்றது.

கடந்த சில நாள்களாக தேசிய, மாநில அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டனர். பிரதமர் மோடி, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, பிரியங்கா காந்தி, உ.பி. முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், மத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணி ஆகியோர் சூறாவளிப் பிரச்சாரம் செய்தனர்.

ஏற்கெனவே, மிசோரம் சட்டப்பேரவைத் தேர்தல் கடந்த நவம்பர் 7இல் ஒரே கட்டமாக நடைபெற்றது.

ஐந்து மாநிலங்களுக்கான தேர்தலில் ராஜஸ்தானில் வரும் 25 ஆம் தேதியும் தெலங்கானாவில் நவ. 30 ஆம் தேதியும் ஒரே கட்டமாகத் தேர்தல் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

logo
Andhimazhai
www.andhimazhai.com