கெளரவ் வல்லப்
கெளரவ் வல்லப்

சனாதனத்துக்கு எதிராகப் பேச முடியாது- காங். கட்சியிலிருந்து விலகிய கௌரவ் வல்லப்!

காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர்களில் ஒருவருமான கெளரவ் வல்லப் அக்கட்சியின் அனைத்து பதவிகளிலிருந்தும் விலகியுள்ளார்.

மகாராஷ்டிர காங்கிரஸ் முன்னாள் தலைவர் சஞ்சய் நிருபத்தை கட்சியிலிருந்து நீக்குவதாக இன்று காலை கட்சித் தலைமை அறிவித்தது.

இதனிடையே, காங்கிரஸ் சார்பில் நிதி - பொருளாதாரம் தொடர்பான தொலைக்காட்சி விவாதங்களில் பங்கேற்றுவந்த செளரவ் கடந்த சில மாதங்களாக எந்த விவாதத்திலும், செய்தியாளர் சந்திப்பிலும் கலந்துகொள்ளாமல் தவிர்த்துவந்தார்.

இந்த நிலையில், அவர் தனது அடிப்படை உறுப்பினர் உட்பட கட்சியின் அனைத்து பதவிகளிலிருந்தும் விலகிக்கொள்வதாக அறிவித்துள்ளார்.

இதுகுறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர், “ திசையில்லாப் பாதையை நோக்கி காங்கிரஸ் சென்றுகொண்டிருப்பதில் எனக்கு உடன்பாடு இல்லை. சனாதனத்துக்கு எதிரான கருத்துகளைக் கூறவோ, நாட்டை வளர்ச்சிப் பாதைக்கு எடுத்து செல்பவர்கள் குறித்து அவதூறு கூறவோ என்னால் முடியாது.” என்று தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com