ஜார்க்கண்டிலும் சாதிவாரி கணக்கெடுப்பு! – சம்பயி சோரன்

சம்பயி சோரன்
சம்பயி சோரன்
Published on

ஜார்க்கண்ட் மாநிலத்தில் சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்தப்படும் என்று அம்மாநில முதல்வர் சம்பயி சோரன் தெரிவித்துள்ளார்.

பீகாரில் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட்ட பிறகு, ஜார்கண்டிலும் கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என பல கட்சிகள் கோரிக்கை விடுத்து வந்தது.

இந்த நிலையில், பீகார் மற்றும் ஆந்திரத்துக்கு அடுத்தபடியாக ஜார்க்கண்டிலும் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த முதல்வர் சம்பயி சோரன் உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தும் மாநிலங்களின் வரிசையில் மூன்றாவது மாநிலமாக ஜார்க்கண்ட் உள்ளது.

இதுதொடர்பாக முதல்வர் சம்பயி சோரன் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், மக்கள்தொகையில் அதிக எண்ணிக்கையில் இருப்பவர்களுக்கு அதிக பங்கு. தயாராகிறது ஜாா்க்கண்ட் என்று தெரிவித்துள்ளார்.

மேலும், கணக்கெடுப்பு நடத்துவதற்கான வரைவு அறிக்கை விரைந்து தயாரித்து மாநில அமைச்சரவையின் ஒப்புதலுக்காக வைக்குமாறு பணியாளர் துறைக்கு முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

logo
Andhimazhai
www.andhimazhai.com