மலை கிராமத்தில் உணவின்றி தவித்தபோது உதவிய கிராம வாசிகளுக்கு இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் நன்றி தெரிவித்துள்ளார்.
கடந்த வாரம் இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார், உத்தராகண்ட் மாநில கூடுதல் தலைமைத் தேர்தல் அதிகாரி விஜய் குமார் ஜோக்தாந்தே உள்ளிட்டோர் பயணம் செய்த ஹெலிகாப்டர், மிக மோசமான வானிலை காரணமாக உத்தராகண்ட் மாநிலம் பிதவுரகர் மாவட்டத்தில் உள்ள ரலாம் என்னும் கிராமத்தில் அவசரமாகத் தரையிறக்கப்பட்டது. இது 12000 அடி உயரத்தில் உள்ள மலைக் கிராமம் என்பதால், அவர்கள் உணவு இல்லாமல்17 மணி நேரம் சிக்கித்தவித்தாக கூறப்பட்டது.
இந்த நிலையில், அந்தப் பகுதியைச் சேர்ந்த ஈஸ்வர் சிங் நபியால், சுரேந்திர குமார் மற்றும் பூபேந்திர சிங் தக்ரியால் ஆகிய மூவர் கரடுமுரடான மலைப்பாதையில் 38 கிலோமீட்டர் நடந்து சென்று, தேர்தல் ஆணையர் ராஜீக் குமார் உட்பட அனைவருக்கும் சூடான நூடுல்ஸ் மற்றும் அத்தியாவசிய பொருட்களைத் தந்து உதவியுள்ளனர்.
இப்படியொரு அவசர காலத்தில் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் உதவி செய்த கிராம வாசிகளை ‘இளம் தேவதைகள்’ என பாராட்டி தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜீவ் குமார் நன்றி தெரிவித்துள்ளார்.