சண்டிகர் தேர்தல் அதிகாரி
சண்டிகர் தேர்தல் அதிகாரி

சண்டிகர் - ஆம் ஆத்மி வெற்றியை உறுதிசெய்த உச்ச நீதிமன்றம்!  

சண்டிகர் மேயர் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சியின் வெற்றியை உச்ச நீதிமன்றம் உறுதிப்படுத்தியுள்ளது. 

பஞ்சாப்- அரியானா தலைநகர் சண்டிகர் உள்ளாட்சி அமைப்பின் மேயர் பதவிக்கு கடந்த மாதம் தேர்தல் நடைபெற்றது. அதில் மொத்தமுள்ள 36 இடங்களில் ஆம் ஆத்மி வேட்பாளர் குல்தீப் 20 இடங்களையும் பா.ஜ.க. வேட்பாளர் மனோஜ் சோன்கர் 16 இடங்களையும் பிடித்தனர். 

ஆனால், 8 வாக்குகள் செல்லாதவை என்றும் ஆம் ஆத்மி வெற்றி பெறவில்லை என்றும் தேர்தல் அதிகாரி அனில் மசிக் அறிவித்தார். அதை எதிர்த்து ஆம் ஆத்மி உச்சநீதிமன்றம் சென்றது. தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான மூன்று பேர் அமர்வு இதை விசாரித்தது. 

அதில், தேர்தல் அதிகாரி அனில் மசிக் வாக்குச்சீட்டில் மையிட்டு எழுதி, மோசடி செய்ததை நீதிமன்றம் கண்டறிந்தது. அத்துடன், நீதிமன்றத்திலேயே வாக்குகளும் எண்ணப்பட்டன. அதன்படி, ஆம் ஆத்மி வெற்றி பெற்றதாக நீதிமன்றம் அறிவித்தது. அத்துடன், தேர்தல் அதிகாரி மோசடியும் செய்துவிட்டு, நீதிமன்றத்தில் பொய் கூறியதையும் குறிப்பிட்டு அவர் மீது நடவடிக்கை எடுக்கவும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.   

logo
Andhimazhai
www.andhimazhai.com