சந்திரபாபு கைது
சந்திரபாபு கைது

சந்திரபாபு நாயுடு கைது- தமிழகப் பேருந்துகள் ஆங்காங்கே நிறுத்தம்

ஆந்திரப்பிரதேச முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு இன்று காலையில் திடீரென கைதுசெய்யப்பட்டார். இதனால் அந்த மாநிலத்தில் பேருந்துகள் இயக்கம் நிறுத்தப்பட்டது. பயணத்தின் பாதி வழியிலேயே ஆங்காங்கே பேருந்துகள் நிறுத்திவைக்கப்பட்டன. 

ஊழல் வழக்கில் அவரைக் கைதுசெய்ய இன்று அதிகாலை 3 மணிக்கு சந்திரபாபுவின் முகாம் அலுவலகத்தில் காவல்துறையினர் முகாமிட்டனர். தகவல் அறிந்து திரண்ட தெலுங்கு தேசம் கட்சியினரைச் சமாளித்து, 6 மணியளவில் சந்திரபாபுவை காவல்துறையினர் கைதுசெய்தனர். 

அசம்பாவிதங்களைத் தவிர்ப்பதற்காக மாநிலம் முழுவதும் பேருந்துகளின் இயக்கம் நிறுத்திவைக்கப்பட்டது. தமிழகத்திலிருந்து சென்ற பேருந்துகள் ஆந்திர எல்லையான ஊத்துக்கோட்டைவரை மட்டுமே இயக்கப்பட்டன. திருப்பதி செல்லும் பக்தர்களும் இதனால் அவதிக்கு உள்ளாகியுள்ளனர்.

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com