கர்நாடக மாநிலம், குடகு மாவட்டத்தில் யானைகள் மோதலில் சென்னையைச் சேர்ந்த சுற்றுலாப் பயணி ஒருவர் கொல்லப்பட்டார்.
அங்குள்ள துபரே யானைகள் முகாமில், காவிரி ஆற்றங்கரைப் பகுதியில் கஞ்சன், ஜெய் மார்த்தாண்டா ஆகிய பெயர்களைக் கொண்ட தசரா யானைகளுக்கு இடையே மோதல் ஏற்பட்டது. அப்போது ஒரு யானையை மற்றொரு யானை கீழே விழச்செய்தது.
இதில், அந்த இடத்தில் யானைகளை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த சென்னை, பல்லாவரத்தைச் சேர்ந்த பெண் சுற்றுலாப் பயணி ஒருவர் விழுந்த யானைக்கு அடியில் சிக்கி உயிரிழந்தார்.
உயிரிழந்தவரின் பெயர் ஜின்னு மேத்யூ. இவருக்கு வயது 33. மென்பொருள் துறையில் பணியாற்றிவந்த இவர், கணவர், 6 வயது குழந்தையுடன் குடகுக்குச் சுற்றுலா சென்றிருந்தார். யானைகள் குளிப்பாட்டுவதை அருகில் இருந்து பார்த்து இரசித்துக்கொண்டிருந்தபோதே இந்த விபரீதம் நிகழ்ந்தது.