'இஸ்லாமியர்களை நோக்கிச் சுடும் முதல்வர்' - பாஜக வெளியிட்ட வீடியோவால் சர்ச்சை!

'இஸ்லாமியர்களை நோக்கிச் சுடும் முதல்வர்' - பாஜக வெளியிட்ட வீடியோவால் சர்ச்சை!
Published on

அசாம் முதலமைச்சர் ஹிமந்த பிஸ்வா சர்மா, துப்பாக்கியால் சுடுவது போன்றும், அதில் இஸ்லாமிய அடையாளங்கள் கொண்ட நபர்கள் இலக்காக வைக்கப்பட்டிருப்பது போன்றும் சித்தரிக்கப்பட்ட ஏஐ வீடியோ சமூக ஊடகங்களில் வெளியாகி பெரும் அதிர்வலயை ஏற்படுத்தியுள்ளது.

126 சட்டமன்ற இடங்களைக் கொண்ட அசாமில், இந்த ஆண்டு மார்ச் - ஏப்ரல் மாதங்களில் தேர்தல் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதையடுத்து, அங்கு ஆட்சியைத் தக்கவைக்கும் முடிவில் பாஜக ஈடுபட்டுள்ளது. அதேநேரத்தில், ஆட்சியை கைப்பற்றும் நோக்கில் காங்கிரஸ் ஈடுபட்டுள்ளது. இதனால் இருதரப்புக்கும் இடையே கடுமையான மோதல் நீடித்து வருகிறது.

இந்த நிலையில் தேர்தலுக்கு முன்னதாகவே மாநிலத்தில் உள்ள முஸ்லிம்களை பாஜக குறிவைத்து வருகிறது. அதேபோல், முஸ்லிம்களுக்கு எதிரான வெறுப்பு பேச்சுகளை முதலமைச்சர் சர்மா தொடர்ந்து கூறி வருவது அங்கு பதற்றங்களை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில், அசாம் முதலமைச்சர் ஹிமந்த பிஸ்வா சர்மா, துப்பாக்கியால் சுடுவது போன்றும், அதில் இஸ்லாமிய அடையாளங்கள் கொண்ட நபர்கள் இலக்காக வைக்கப்பட்டிருப்பது போன்றும் சித்தரிக்கப்பட்ட ஏஐ வீடியோ சமூக ஊடகங்களில் வெளியாகி பெரும் அதிர்வலயை ஏற்படுத்தியுள்ளது.

முஸ்லிம் சமூகத்தை குறிவைத்து முதலமைச்சர் சர்மா தொடர்ந்து தெரிவித்து வரும் கருத்துகளுக்கு மத்தியில் இவ்வீடியோ வெளியிடப்பட்டிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அசாம் மாநில பாஜக தனது அதிகாரப்பூர்வ சமூக ஊடகப்பக்கத்தில் இந்த சர்ச்சைக்குரிய ஏஐ வீடியோவை வெளியிட்டிருந்தது. இதற்கு எதிர்க்கட்சிகள் கடுமையான எதிர்ப்பு தெரிவித்ததால், அம்மாநில பாஜக சர்ச்சை வீடியோவை நீக்கியுள்ளது.

logo
Andhimazhai
www.andhimazhai.com