ஞானேஷ்குமார் பதவி விலக அக்.10.-ல் போராட்டம் - கரப்பான் கட்சி அறிவிப்பு!

Abhijeet Dipke
அபிஜீத் தீப்கே
Published on: 

ஞானேஷ்குமார் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து, வரும்  10ஆம் தேதி, தில்லி ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்தப்படும் என்று கரப்பான் கட்சி அறிவித்துள்ளது.

தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார்,வாக்காளர் சிறப்புத் தீவிரத் திருத்தத்தில் தன்னிச்சையாக முடிவெடுத்ததாக வெளியான தகவலைத் தொடர்ந்து பல்வேறு தரப்பினரும் அவர் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கையை விடுத்து வருகின்றனர்.    

இந்நிலையில், ஞானேஷ்குமார் பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தி, மும்பையில் உள்ள சிவாஜி பூங்கா பகுதியில் கரப்பான் கட்சி தலைமையில், நேற்று மாலை நடைபெற்ற போராட்டத்தில் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

அதைத் தொடர்ந்து, ஞானேஷ்குமார் பதவி விலகாவிட்டால் வரும் 10ஆம் தேதி புதுதில்லி ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்தப்படும் என்ரு கரப்பான் கட்சியின் நிறுவனர் அபிஜீத் தீப்கே அறிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் சமூக ஊடகதத்தில் வெளியிட்டுள்ள கருத்தானது:

"ஞானேஷ்குமார் பதவி விலகவில்லை என்றால், நாடு முழுவதும் உள்ள கரப்பான் பூச்சி இளைஞர்கள், தில்லி ஜந்தர் மந்தரை நோக்கி வரும் அக்டோபர் 10ஆம் தேதி போராட்டம் நடத்துவோம்.

தில்லி காவல்துறை எங்களைத் தடுத்தால், எங்கே தடுக்கிறார்களோ அந்த இடமே ஜந்தர் மந்தர் ஆகிவிடும்.

நாங்கள் மகாத்மா காந்தி காட்டிய வழியில் அமைதியாகப் பயணிக்கவுள்ளோம். அமைதியான முறையில் போராட்டம் நடத்திய எங்களின் உரிமையை மதிப்பதா அல்லது ஜூலை 20 (நீட் போராட்டம்) அன்று நாங்கள் கண்ட கொடூரத்தை மீண்டும் நிகழ்த்துவதா என்பது அரசு, தில்லி காவல்துறையின் கையில்தான் உள்ளது." என்று அபிஜீத் கூறியுள்ளார்.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடர: Facebook, Twitter, Youtube, Instagram

logo
Andhimazhai
www.andhimazhai.com