தில்லியில் தேசியக் கொடியுடன் சி.ஜே.பி. போராட்டம்!

CJP protest
கரப்பான் கட்சி தேசிய கொடியுடன் போராட்டம் நடத்த முடிவு
Published on: 

தில்லியில் தேசியக் கொடியுடன் இன்று போராட்டம் நடத்தவுள்ளதாக கரப்பான் கட்சியினர் தெரிவித்துள்ளனர்.

தில்லியில் போராட்டம் நடத்தக்கூடிய அதிகாரப்பூர்வ இடங்களில் இருந்து தில்லி ஜந்தர் மந்தரை நீக்குவதாக தில்லி காவல்துறையின் அறிவிப்பை மீறி, கரப்பான் கட்சியின் நிர்வாகிகள் அஷூதோஷ் ரங்கா, சௌரவ் தாஸ் உட்பட்டோர் ஜந்தர் மந்தரில் தேசியக் கொடியுடன் போராடினர்.

இதனையடுத்து, கரப்பான் கட்சியின் நிர்வாகிகள் அஷூதோஷ் ரங்கா, சௌரவ் தாஸ் ஆகிய இருவரையும் 5 நாள்கள் நீதிமன்றக் காவலில் வைக்க தில்லி நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதைதொடர்ந்து, தேசியக் கொடியுடன் போராட்டம் நடத்திய கரப்பான் கட்சியின் நிர்வாகிகள் கைது செய்யப்பட்டதை எதிர்த்து, தில்லி கன்னாட் பிளேஸில் தேசியக் கொடியுடன் இன்று போராட்டம் நடத்தப்படும் என்று கரப்பான் கட்சியின் நிறுவனர் அபிஜீத் திப்கே அறிவித்தார்.

கரப்பான் கட்சியின் போராட்டம் தொடர்பான அறிவிப்பை தொடர்ந்து, கன்னாட் பிளேஸ், ஜந்தா் மந்தா் ஆகிய இடங்களிலும், அவற்றைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை காவல்துறை மேற்கொண்டுள்ளன.

மேலும், வரும் அக்டோபர் 18ஆம் தேதி வரை, தில்லி கன்னாட் பிளேஸ் பகுதியில் உள்ள சென்ட்ரல் பூங்கா மூடப்படுவதாக அறிவிப்பு வெளியானது. இதற்கு, கரப்பான் கட்சியின் நிறுவனர் அபிஜீத் திப்கே, " நாங்கள் 100 இடங்களில் போராட்டங்கள் நடக்கும் என்று அறிவித்தால், நரேந்திர மோடி அந்த 100 இடங்களையும் மூடிவிடுவாரா ?" என்ற கேள்வியை எழுப்பியுள்ளார்.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடர: Facebook, Twitter, Youtube, Instagram

logo
Andhimazhai
www.andhimazhai.com