முடிவுக்கு வந்தது தில்லி கரப்பான் பூச்சி கட்சியினர் போராட்டம்!

Central ministers and CJP at press meet
செய்தியாளர்கள் சந்திப்பில் மத்திய அமைச்சர்கள், சி.ஜே.பி.
Published on

நீட் தேர்வில் நடந்த முறைகேடுகளைத் தொடர்ந்து, கடந்த 37 நாள்களாக டெல்லியில் போராட்டம் நடத்தி வந்த கரப்பான் பூச்சி கட்சியினர் இன்று போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவந்தனர்.

மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவிவிலக வேண்டும், நீட் தேர்வில் நடந்த முறைகேடுகளுக்கு அரசு பொறுப்பேற்க வேண்டும் உட்பட்ட கோரிக்கைகளை முன்வைத்து, டெல்லி ஜந்தர் மந்தரில் மாணவர்கள் போராட்டம் நடத்தி வந்தனர்.

இந்நிலையில், அமைச்சர் தர்மேந்திர பிரதான் இன்று பதவி விலகினார்.

இதை தொடர்ந்து, ஜெ.பி. நட்டா, ஜித்தேந்திர சிங் உட்பட்ட மத்திய அமைச்சர்களுடன் கரப்பான் பூச்சி கட்சியினர் மூன்றாம் கட்டமாகப் பேச்சுவார்த்தையை நடத்தினர்.

பின்னர், செய்தியாளர்கள் சந்திப்பில் கரப்பான் பூச்சி கட்சியின் செளரவ் தாஸ், அஷ்டோஸ் ரன்கா கூறியதாவது:

" எங்களுடைய இரண்டாவது கோரிக்கை, போராட்டத்தில் பங்குபெற்றவர்கள் மீது பதிவு செய்துள்ள முதற்கட்ட வழக்குப்பதிவுகளைக் கைவிட வேண்டும் என்பதாகும். அதற்கு அரசு ஒப்புதல் தெரிவித்துள்ளது.

இதுவரை 15 முதல் 20 பேரின் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. அந்த முதற்கட்ட வழக்குப்பதிவுகளின் அறிக்கைகளை 3 முதல் 4 நாள்களுக்குள் அரசு எங்களிடம் ஒப்படைப்பதாக தெரிவித்துள்ளது.

வரும் செவ்வாய்க்கிழமைக்குள் முதற்கட்ட வழக்குப்பதிவுகளின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து அரசு, எழுத்துப்பூர்வமாக வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், நீட் வினாத்தாள் கசிவினால் உயிரிழந்த மாணவர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்கவும் அரசு ஒப்புக்கொண்டுள்ளது." என்று இருவரும் கூறினர்.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram

logo
Andhimazhai
www.andhimazhai.com