(வலமிருந்து) சுவேந்து அதிகாரி, அஜித் பவார், அர்ச்சனா பாட்டீல், அசோக் சவுகான், ஹிமந்த பிஸ்வா சர்மா, பாவனா கவாலி
(வலமிருந்து) சுவேந்து அதிகாரி, அஜித் பவார், அர்ச்சனா பாட்டீல், அசோக் சவுகான், ஹிமந்த பிஸ்வா சர்மா, பாவனா கவாலி

’பா.ஜ.க.வில் சேர்ந்தவர்களில் வழக்குகள் முடித்துவைப்பு!’

விசாரணை அமைப்புகளை பா.ஜ.க. அரசியல் ஆயுதமாகப் பயன்படுத்துவதாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே குற்றம் சாட்டியுள்ளார்.

எதிர்க்கட்சித் தலைவர்கள் மீதான விசாரணை அமைப்புகளின் வழக்குகள் குறித்த அறிக்கையை ’தி இந்தியன் எக்ஸ்பிரஸ்’ நாளேடு வெளியிட்டுள்ளது. அதில், 10 ஆண்டு கால பா.ஜ.க. ஆட்சியில், ஊழல் வழக்குகளுக்கு ஆளான எதிர்க்கட்சி தலைவர்கள் 25 பேர் பா.ஜ.க.வில் சேர்ந்துள்ளதாகவும், அவர்களில் 3 பேருக்கு எதிரான ஊழல் வழக்குகள் முடித்துவைக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

மேலும், 20 பேருக்கு எதிரான வழக்குகள் விசாரணை ஏதுமின்றி நிறுத்திவைக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

நடப்பாண்டில் மட்டும், ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளான 6 அரசியல்வாதிகள் பா.ஜ.க.வில் சேர்ந்துள்ளதாகவும், ஊழல் வழக்குகளுக்கு பயந்து அதிகபட்சமாக காங்கிரஸ் கட்சியிலிருந்து 10 பேர் விலகி பா.ஜ.க.வில் இணைந்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

தேசியவாத காங்கிரஸ், சிவசேனாவிலிருந்து தலா 4 பேரும், திரிணாமூல் காங்கிரசில் இருந்து 3 பேரும், தெலுங்கு தேசம் கட்சியிலிருந்து 2 பேரும், சமாஜ்வாதி, ஜெகன்மோகன் கட்சிகளிலிருந்து தலா ஒருவரும் விலகி பா.ஜ.க.வில் சேர்ந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதைப் பற்றிக் குறிப்பிட்டு காங்கிரஸ் காங்கிரஸ் தலைவர் மால்லிகார்ஜுன கார்கே தனது எக்ஸ் தளத்தில்,

”விசாரணை அமைப்புகளை அரசியல் ஆயுதமாக பா.ஜ.க. பயன்படுத்துகிறது. ஊழல் குற்றச்சாட்டுகளில் இருந்தவர்கள் பா.ஜ.க.வில் இணைந்தால் மோடி வாஷிங் மிஷின் மூலம் சுத்தப்படுத்தப்படுகிறார்கள். சி.பி.ஐ., அமலாக்கத்துறை, வருமான வரித்துறை போன்ற விசாரணை அமைப்புகளை அரசியல் ஆயுதமாக பா.ஜ.க. பயன்படுத்தியது அம்பலமாகியுள்ளது. நரேந்திர மோடி – அமித் ஷா கூட்டணியின் செயல், ஜனநாயகத்துக்கு சாபமாக மாறியுள்ளது.” என்று கருத்து தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com