அடுத்த பிரதமர் வேட்பாளர்... விஜய்? - கருத்துக்கணிப்பு முடிவு

CM Vijay
முதலமைச்சர் விஜய்
Published on

வருகின்ற 2029ஆம் ஆண்டில், இந்தியாவின் பிரதமர் வேட்பாளருக்கான கருத்துக்கணிப்பில் தமிழக முதலமைச்சர் விஜய் மூன்றாம் இடத்தைப் பிடித்துள்ளார்.

‘தேசத்தின் மனநிலை’ என்ற தலைப்பில் கடந்த ஜூலை 1 முதல் ஆகஸ்ட் 25 வரை 25,184 பேரிடம் இந்த கருத்துக்கணிப்பை இந்தியா டுடே – சி வோட்டர் நடத்தியது. இதில் 48.7% ஆதரவுடன் பிரதமர் மோடி முதலிடத்திலும், 27.1% ஆதரவுடன் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இரண்டாமிடமும், 9.2% ஆதரவுடன் தமிழக முதலமைச்சர் விஜய் மூன்றாமிடத்தையும் பெற்றுள்ளனர்.

கருத்துக்கணிப்பில், அடுத்த பிரதமர் யார் என்ற கேள்வியுடன், எதிர்க்கட்சிக் கூட்டணியை வழிநடத்த யார் மிகவும் பொருத்தமானவர் என்ற கேள்வியும் கேட்கப்பட்டது. அதில் 29% வாக்குகளுடன் ராகுல் காந்தி முதலிடத்தையும், முதலமைச்சர் விஜய் 12.2% வாக்குகளுடன் இரண்டாம் இடத்தையும் பிடித்துள்ளனர்.

வருகின்ற 2029- இல் பிரதமர் பதவிக்கான போட்டியாளராக விஜய் இருப்பார் என்ற எண்ணம் இனி தமிழ்நாட்டிற்குள் மட்டும் அடங்கியிருக்கவில்லை என்று கணக்கெடுப்பிற்கு பிறகு, இந்தியா டுடே கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram

logo
Andhimazhai
www.andhimazhai.com