இந்தியா
காஷ்மீர் லடாக் தன்னாட்சி கவுன்சிலில் காங். அணி வெற்றி!
காஷ்மீர் மாநிலத்தைப் பிரித்து உருவாக்கப்பட்ட லடாக் ஒன்றியப்பகுதியில், லடாக் தன்னாட்சி மலை மேம்பாட்டு கவுன்சிலுக்கு அண்மையில் தேர்தல் நடத்தப்பட்டது. மொத்தம் உள்ள 30 இடங்களில், 4 இடங்கள் போக மீதமுள்ள 26 இடங்களுக்கு தேர்தல் நடைபெற்றது.
காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட பிறகு நடக்கும் முதல் தேர்தல் இது. மொத்தம் 77.61 சதவீத வாக்குகள் பதிவாகின. நேற்று வாக்குகள் எண்ணப்பட்டு, இரவு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இதில், தேசிய மாநாட்டுக் கட்சி 12 இடங்களையும், அதன் கூட்டணிக் கட்சியான காங்கிரஸ் 10 இடங்களையும் கைப்பற்றின. பா.ஜ.க., சுயேச்சைகள் தலா இரண்டு இடங்களில் வெற்றிபெற்றன.