அஜய் மக்கான்
அஜய் மக்கான்

காங்கிரஸ் கட்சியின் வங்கிக் கணக்குகள் முடக்கம்!

காங்கிரஸ் கட்சியின் வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதாக அக்கட்சியின் பொருளாளர் அஜய் மக்கான் தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து டெல்லியில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், தாங்கள் தரும் காசோலைகள் நிராகரிக்கப்படும் தகவல் நேற்றுதான் தெரியவந்தது என்று தெரிவித்தார். 

இளைஞர் காங்கிரசின் வங்கிக் கணக்குகளும் முடக்கப்பட்டுள்ளன என்றும் அவர் கூறினார். 

கடந்த 2018ஆம் ஆண்டில் 45 நாள்கள் தாமதமாக வருமான வரிக் கணக்கை சமர்ப்பித்ததாகக் கூறி, 210 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது என்றும்,

தேர்தல் அறிவிக்கப்பட இரண்டு வாரங்களே இருக்கும் நிலையில், எதிர்க்கட்சியின் வங்கிக் கணக்கை முடக்குவது ஜனநாயகத்தையே முடக்குவதாகும் என்றும் அஜய் மக்கான் கூறினார். 

logo
Andhimazhai
www.andhimazhai.com