மல்லிகார்ஜுன கார்கே
மல்லிகார்ஜுன கார்கே

இந்தியா கூட்டணிக் கட்சித் தலைவர்களுக்கு காங்கிரஸ் அழைப்பு!

'இந்தியா' கூட்டணிக் கட்சித் தலைவர்களின் கூட்டத்திற்கு காங்கிரஸ் கட்சி அழைப்பு விடுத்துள்ளது.

பாரதிய ஜனதா கட்சிக்கு எதிராக எதிர்க்கட்சிகள் உருவாக்கியுள்ள இந்தியா கூட்டணியின் ஆலோசனைக் கூட்டம் பாட்னா, பெங்களூர், மும்பையில் அடுத்தடுத்த கூட்டங்கள் நடைபெற்றன.

இதற்கிடையே, ஐந்து மாநிலங்களுக்கு சட்டப்பேரவைத் தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில், இந்தியா கூட்டணியின் செயல்பாடு முடங்கிப்போனதாக விமர்சிக்கப்பட்டது. இந்தியா கூட்டணியை ஒருங்கிணைத்த நிதிஷ்குமாரே 5 மாநில தேர்தல் முடிவடைந்ததும் காங்கிரஸுக்கு "இந்தியா" கூட்டணியின் நினைப்பு வந்துவிடும் என கிண்டலடித்திருந்தார்.

இந்த நிலையில், மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான், தெலங்கானா, சத்தீஸ்கர் ஆகிய நான்கு மாநிலங்களின் சட்டப்பேரைக்கான தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. அதில் தெலங்கானாவைத் தவிர்த்து மற்ற மூன்று மாநிலங்களில் பா.ஜ.க. முன்னிலையில் உள்ளது.

இப்படியான சூழலில், கூட்டணிக் கட்சித் தலைவர்களின் கூட்டத்தில் பங்கேற்குமாறு காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, இந்தியா கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

இக்கூட்டம் டெல்லியில் வரும் டிசம்பர் 6 ஆம் தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com