ஜெய்ராம் ரமேஷ்
ஜெய்ராம் ரமேஷ்

அமைச்சர்களுக்கு துறை அறிவிக்கப்படாமல் இருப்பது குறித்து காங்கிரஸ் விமர்சனம்!

பிரதமர் பதவியேற்று கிட்டத்தட்ட 24 மணிநேரம் ஆகியும் இன்னும் அமைச்சர்களின் துறைகள் அறிவிக்கப்படவில்லை என காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் விமர்சித்துள்ளார்.

நரேந்திர மோடி உட்பட 72 பேர் நேற்று அமைச்சர்களாகப் பதவியேற்றுக்கொண்டனர். அமைச்சர்களுக்கான துறைகள் நேற்றே ஒதுக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அறிவிக்கப்படவில்லை. இன்றும் அதற்கான அறிவிப்பு இதுவரை வெளிவரவில்லை.

இந்த நிலையில், காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் ஜெயராம் ரமேஷ் தனது எக்ஸ் பக்கத்தில், “பிரதமர் பதவியேற்று கிட்டத்தட்ட 24 மணிநேரம் ஆகியும் இன்னும் துறைகள் அறிவிக்கப்படவில்லை. ஏற்கெனவே அவர்களுக்கு நடுக்கம்.” என அவர் பதிவிட்டுள்ளார்.

logo
Andhimazhai
www.andhimazhai.com