(வலமிருந்து) சோனியா காந்தி, கார்கே, ராகுல் காந்தி
(வலமிருந்து) சோனியா காந்தி, கார்கே, ராகுல் காந்தி

காங்கிரஸ் தேர்தல் அறிக்கை: சாதிவாரி கணக்கெடுப்பு, 30 லட்சம் வேலை!

மக்களவைத் தேர்தலுக்கான காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையை காங்கிரஸ் தலைவர் கார்கே, சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோர் இன்று வெளியிட்டனர். அதில் 5 தலைப்புகளில் 25 வாக்குறுதிகள் அளிக்கப்பட்டுள்ளன.

தேர்தல் அறிக்கையை வெளியிட்டுப் பேசிய ப.சிதம்பரம், பா.ஜ.க. ஆட்சியில் ஜனநாயகம் படுகுழிக்குத்தள்ளப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டினார்.

காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ள சில முக்கிய அறிவிப்புகள்

* பொருளாதரத்தில் பின்தங்கிய அனைத்து சமூகத்தினருக்கும் 10% இடஒதுக்கீடு

* மாநில அரசு விருப்பப்பட்டால் மட்டுமே நீட் நுழைத் தேர்வு நடத்தப்படும்

* நாடு முழுவதும் சமூக, பொருளாதார, சாதிவாரியான கணக்கெடுப்பு நடத்தப்படும்

*எஸ்.சி/ எஸ்.டி., ஓ.பி.சி பிரிவினருக்கான காலிப்பணியிடங்கள் ஓராண்டுக்குள் நிரப்பப்படும்

* பட்டியலின மாணவர்கள் மீதான துன்புறுத்தல்களைத் தடுக்க ரோகித் வெமுலா சட்டம் இயற்றப்படும்

* 30 லட்சம் காலி பணியிடங்கள் நிரப்பப்படும்

* நாடு முழுவதும் ஒவ்வொரு ஒன்றியத்துக்கும் பட்டியல் இன மாணவர்களுக்கு உண்டு உறைவிட பள்ளிகள் அமைக்கப்படும்.

* மத்திய அரசு பணிகளில் பெண்களுக்கு 50% இடஒதுக்கீடு

* 12ஆம் வகுப்பு வரை இலவச கல்வி

* இட ஒதுக்கீட்டுக்கான 50% உச்சவரம்பு நீக்கப்படும்

* புதுச்சேரி - காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து வழங்கப்படும்

* ஏழைகளுக்கு ஆண்டுக்கு ரூ. 1 லட்சம் வழங்கப்படும்

* வேளாண் விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை சட்டரீதியாக உறுதி செய்யப்படும்

* மார்ச் 2024 வரை பெறப்பட்ட அனைத்து கல்விக்கடன்களும் ரத்து செய்யப்படும்

* பா.ஜ.க. கொண்டு வந்த ஜி.எஸ்.டி. சட்டம் ரத்து செய்யப்பட்டு, வணிகர்களுக்கு ஏற்ற புதிய ஜி.எஸ்.டி (2.0) கொண்டுவரப்படும்

* மீனவர்களுக்கு டீசல் மானியம் வழங்கும் திட்டம் மீண்டும் செயல்படுத்தப்படும்

* 100 நாள் வேலை திட்டத்துக்கான ஊதியம் ரூ. 400 ஆக உயர்த்தப்படும்

* 14 லட்சம் பேர் அங்கன்வாடி பணியாளர்களாக நியமிக்கப்படுவார்கள்

* திறமை வாய்ந்த விளையாட்டு வீரர்களுக்கு மாதம் ரூ. 10, 000 உதவித்தொகை வழங்கப்படும்

* ரூ 25 லட்சம் மதிப்புள்ள காப்பீட்டு திட்டம் செயல்படுத்தப்படும்

 * அரசு பணிகளுக்கு ஒப்பந்த அடிப்படையில் ஆள் சேர்க்கும் நடைமுறை ரத்துசெய்யப்படும்

* ரயில்களில் மூத்த குடிமக்களுக்கு கட்டணத்தில் மீண்டும் சலுகை அமல்படுத்தப்படும்

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com