பிருந்தா காரத்
பிருந்தா காரத்

அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழாவில் சி.பி.எம். பங்கேற்காது!

மதத்தை அரசியலாக்கக் கூடிய ராமர் கோயில் திறப்பு விழாவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கலந்துகொள்ளாது என்று பிருந்தா காரத் தெரிவித்துள்ளார்.

உத்தர பிரதேசத்தின் அயோத்தியில் ஜனவரி 22-ஆம் தேதி நடைபெற உள்ள ராமர் கோயில் திறப்பு விழாவில் பங்கேற்பதற்கு சி.பி.எம். கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரிக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், அக்கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினரான பிருந்தா காரத் ஏ.என்.ஐ செய்து ஊடகத்துக்கு அளித்தப் பேட்டியில், ”மக்களின் மத உணர்வுகளை நாங்கள் மதிக்கிறோம். ஆனால் பா.ஜ.க.வினர் மதத்தை அரசியலுடன் இணைக்கின்றனர். இது ஒரு மத நிகழ்ச்சி. இந்த மத நிகழ்ச்சியை பா.ஜ.க.வினர் அரசியலாக்க முயற்சிக்கின்றனர். இது சரியல்ல. எனவே எங்கள் கட்சி இந்த விழாவில் கலந்துகொள்ளாது.” என்றார்.

ராமர் கோயிலின் சார்பில் சீத்தாராம் யெச்சூரி, காங்கிரஸ் தலைவர்கள் சோனியா காந்தி, மல்லிகார்ஜூன கார்கே, ஆதிர் ரஞ்சன் சௌத்ரி உள்ளிட்டோருக்கும் அழைப்பிதழ் அனுப்பப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com