கியூட் இளநிலைத் தேர்வு முடிவுகள் வெளியீடு!

CUET Exam results declared
கியூட் இளநிலைத் தேர்வு முடிவு வெளியீடு
Published on

கியூட் இளநிலைத் தேர்வு முடிவுகளை தேசிய தேர்வு முகமை இன்று வெளியிட்டுள்ளது.

நாடு முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்களில் இளநிலை, முதுநிலை பட்டப்படிப்புகளில் சேர கியூட் என்னும் நுழைவுத்தேர்வை மத்திய அரசு நடத்துகிறது.

இந்நிலையில், மத்திய பல்கலைக்கழகங்களில் இளநிலை படிப்பில் சேருவதற்கான தேர்வு முடிவுகள் இன்று வெளியாகியுள்ளது.

இந்தத் தேர்வு முடிவுகளை மாணவர்கள் தங்களது விண்ணப்ப எண், கடவுச்சொல் கொடுத்து அதன் அதிகாரபூர்வ இணையதளத்தில் பதிவிறக்கம் செய்துக்கொள்ளலாம்.

cuet.nta.nic.in.  என்ற அதிகாரபூர்வ இணையதளத்தில் மதிப்பெண் பட்டியலைப் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என்று தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.

இந்த ஆண்டு மே-11 முதல் ஜூன் 7வரை இந்தத் தேர்வு நடைபெற்றது.

logo
Andhimazhai
www.andhimazhai.com