நாளை மாலை உருவாகும் அக்வான் புயல்: இந்திய வானிலை ஆய்வு மையம் விடுத்த கனமழை எச்சரிக்கை!

cyclone
புயல்
Published on: 

வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் தீவிர புயலாக மாறவுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஏற்கெனவே இந்த புயலுக்கு அக்வான் எனப் பெயரிடப்பட்டது தெரிந்ததே.

இதுகுறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை:

"நேற்று தென்கிழக்கு வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, வடக்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது.

இன்று அதிகாலை 5.30 மணி நிலவரப்படி, இது தென்கிழக்கு, அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடலில் நிலைக் கொண்டுள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் அந்தமானின் ஸ்ரீ விஜயபுரத்தில் இருந்து 700 கி.மீ. மேற்கு - தென்மேற்கிலும், தமிழகத்தின் சென்னையில் இருந்து 860 கி.மீ. கிழக்கு - தென்கிழக்கிலும், ஆந்திராவின் விசாகப்பட்டினத்தில் இருந்து 1040 கி.மீ. தெற்கு - தென்கிழக்கிலும், ஒடிசாவில் இருந்து 1160 கி.மீ. தெற்கு - தென்கிழக்கிலும் அமைந்துள்ளது.

இது தொடர்ந்து வடக்கு - வடமேற்கு திசையில் நகரக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது நாளை மேற்கு - மத்திய வங்கக்கடல் பகுதியில் சூறாவளிப் புயலாக வலுவடையக்கூடும். மேலும், நாளை மறுநாள் மேற்கு - மத்திய வங்கக்கடல் பகுதியில் தீவிர சூறாவளிப் புயலாக வலுவடைய வாய்ப்புள்ளது.

இதனால், அந்தமான், ஆந்திரா, ஒடிசா, மேற்குவங்காளம் ஆகிய இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. மேலும், அடுத்த 2 நாள்களில் இந்தப் புயல் ஆந்திரக் கடலோரப் பகுதிகளை நோக்கி நகரக்கூடும்." என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடர: Facebook, Twitter, Youtube, Instagram