இந்தியாவில் டெங்கு தடுப்பூசி... ஒப்புதல் தரப்பட்டது!

dengue
டெங்கு
Published on: 

இந்தியாவில் டெங்கு காய்ச்சலைக் கட்டுப்படுத்த முதன்முறையாக ஒரு தடுப்பூசிக்கு மத்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு அனுமதி வழங்கியுள்ளது.

ஜப்பானைச் சேர்ந்த 'டகேடா பயோ பார்மசூட்டிக்கல்ஸ்' நிறுவனம் உருவாக்கிய 'கியூடெங்கா' என்ற தடுப்பூசிக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

இந்தத் தடுப்பூசி 4 முதல் 60 வயது வரை உள்ளவர்கள் பயன்படுத்தலாம்.

டெங்கு வைரசின் நான்கு வகைகளான டி.இ.என்.வி. -1, 2, 3, 4 ஆகியவற்றிக்கு எதிராக பாதுகாப்பு அளிக்கும் வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது.

மேலும், நிர்ணயிக்கப்பட்ட வயதில் உள்ள அனைவரும் இந்தத் தடுப்பூசியை மருத்துவரின் ஆலோசனையின்படி செலுத்திக்கொள்ளலாம்.

இது இரண்டு தவணைகளாக செலுத்தப்படும் தடுப்பூசி ஆகும். முதல் டோஸூக்குப் பிறகு மூன்று மாத இடைவெளியில் இரண்டாவது டோஸ் செலுத்தப்பட வேண்டும்.

மருத்துவப் பரிசோதனைகளில் இந்தத் தடுப்பூசி தீவிர டெங்கு பாதிப்பையும், மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் அபாயத்தையும் குறைப்பதாக தெரியவந்துள்ளது.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடர: Facebook, Twitter, Youtube, Instagram

logo
Andhimazhai
www.andhimazhai.com