பிறப்பை விட இறப்பு எண்ணிக்கை அதிகம்; தென் மாநிலங்களில் குறையும் மக்கள் தொகை!

பிறப்பை விட இறப்பு எண்ணிக்கை அதிகம்; தென் மாநிலங்களில் குறையும் மக்கள் தொகை!
Published on

இந்தியா முழுவதும் 49 மாவட்டங்களில், குழந்தைப் பிறப்பு எண்ணிக்கையைவிட,மனிதர்கள் இறப்பு எண்ணிக்கை அதிகமாக உள்ளது என 2021இந்திய குடிமக்கள் பதிவின் தரவுகள் வெளிப்படுத்துகிறது.

உலகிலேயே அதிகமாக 140 கோடி மக்கள் தொகை கொண்ட நாடாக இந்தியா திகழ்கிறது. 2019 ஆம் ஆண்டு தரவுகளின் படி இந்தியாவில் பிறப்பு எண்ணிக்கை இறந்தோர் எண்ணிக்கையைவிட குறைவாக இருந்த மாவட்டங்கள் 7ஆக இருந்தன. ஆனால் தற்போது இரண்டு ஆண்டுகளில் இந்த எண்ணிக்கை 49 ஆக உயர்ந்துள்ளது. இந்த மாவட்டங்கள் பெரும்பாலும் தென்னிந்தியாவில்தான் உள்ளன. தமிழ்நாட்டில் 17 மாவட்டங்கள், கர்நாடகாவில் 7 ,கேரளாவில் 6, குஜராத்தில் 5, மகாராஷ்டிரா, ஜம்மு காஷ்மீர் ,புதுச்சேரி ,கோவா ஆகியவைகளில் 2, தெலுங்கானா ,ஒடிசா, மணிப்பூர் ஆந்திரபிரதேசம், இமாச்சல் ,சிக்கிம் ஆகியவற்றில் தலா ஒரு மாவட்டம் என இந்த நிலை காணப்படுகிறது.

மேலும் 2019 ஆம் ஆண்டு பூஜ்ஜியத்தில் இருந்த தமிழ்நாட்டில் இப்போது 17 மாவட்டங்க ளில் பிறப்பை விட இறப்பு எண்ணிக்கை அதிகமாக பதிவாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த விவரங்கள் தென்னிந்தியாவில் மக்கள் தொகை குறைந்துவருவதையே காட்டுகின்றன.

logo
Andhimazhai
www.andhimazhai.com