டெல்லி காற்று மாசு
டெல்லி காற்று மாசு

டெல்லி காற்று மாசு: பள்ளிகளுக்கு 10ஆம் தேதி வரை விடுமுறை அறிவிப்பு!

டெல்லியில் காற்று மாசு தொடர்ந்து அதிகரித்து வருவதால், அங்கு உள்ள தொடக்க பள்ளிகளுக்கு நவம்பர் 10ஆம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

பருவநிலை மாறுபாடு, வாகன புகை, அண்டை மாநிலங்களில் பயிர் கழிவுகள் எரிக்கப்படுவதால் ஏற்படும் புகை, கட்டு கட்டுமான பணிகள் உள்ளிட்டவையால் டெல்லியின் காற்று மாசு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

டெல்லியில் 2ஆவது நாளாக காற்றின் தரக் குறியீடு மிகவும் மோசமாக உள்ளது. இன்று காலை ஒட்டுமொத்த காற்றின் தரக் குறியீடு 460-ஆக இருந்தது.பல இடங்களில் 400-க்கும் மேல் இருந்தது.

இந்நிலையில், டெல்லியில் காற்று மாசு அதிகரித்துள்ளதால் தொடக்கப் பள்ளிகளுக்கு 10ஆம் தேதி வரை விடுமுறை அளிக்கப்படுவதாக மாநில அரசு அறிவித்துள்ளது.

அதன்படி பள்ளிகளில் 5ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. ஏற்கனவே 2 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டிருந்த நிலையில் 10ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

6 முதல் 12ஆம் வகுப்பு வரையிலான பள்ளிகளை மூட கட்டாயமில்லை. ஆனால் அவர்கள் விரும்பினால் ஆனலைன் வகுப்புகளை நடத்த முடிவுசெய்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை டெல்லி மாநில கல்வி அமைச்சர் அதிஷி தெரிவித்தார்.

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com