அரவிந்த் கெஜ்ரிவால்
அரவிந்த் கெஜ்ரிவால்

“என் மீதான குற்றச்சாட்டிற்கு ஆதாரம் இல்லை!”– அரவிந்த் கெஜ்ரிவால்

மத்திய அரசு எதிரிகளை பழிவாங்குவதற்காக அமலாக்கத்துறையைப் பயன்படுத்துவதாக அரவிந்த் கெஜ்ரிவால் குற்றம்சாட்டியுள்ளார்.

டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில், முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கடந்த மாதம் 21ஆம் தேதி கைது செய்யப்பட்டார். கைது நடவடிக்கையை எதிர்த்து கெஜ்ரிவால் தாக்கல் செய்த மனு மீது பதில் அளிக்கும்படி அமலாக்கத்துறைக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதன்படி, 'டில்லி மதுபான கொள்கை ஊழலுக்கு தலைமை ஏற்று, சதி திட்டங்கள் தீட்டியதில் முக்கிய நபராக முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் இருந்துள்ளார். இந்த ஊழலில் அதிகம் பயன் அடைந்தது, ஆம் ஆத்மி கட்சி. 'எனவே, ஒரு குற்றத்திற்காக காரணத்துடன் ஒருவரை கைது செய்வது, சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தல் நடைமுறையை மீறுவதாகாது' என, உச்சநீதிமன்றத்தில் அமலாக்கத்துறை பதில் அளித்துள்ளது.

இந்நிலையில், இன்று உச்சநீதிமன்றத்தில் இன்று அரவிந்த் கெஜ்ரிவால் பதில் மனு தாக்கல் செய்துள்ளார். அதில், ''அரசியல் எதிரிகளை பழிவாங்குவதற்காக அமலாக்கத்துறையை மத்திய அரசு பயன்படுத்துகிறது. என் மீதான குற்றச்சாட்டிற்கு ஆதாரம் இல்லை. ஆம் ஆத்மி கட்சிக்கு ஒரு ரூபாய் கூட ஊழல் செய்யவில்லை. மதுபான கொள்கை முறைகேடு வழக்கு தொடர்பாக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் எந்த ஆதாரமும் இல்லை'' என கெஜ்ரிவால் கூறியுள்ளார்.

logo
Andhimazhai
www.andhimazhai.com