கிழக்கு தில்லி பேபி கேர் குழந்தைகள் மருத்துவமனையில் தீ விபத்து
கிழக்கு தில்லி பேபி கேர் குழந்தைகள் மருத்துவமனையில் தீ விபத்து

தில்லி தீயில் 9 பச்சிளம் குழந்தைகள் பலி; 12 குழந்தைகள் தப்பின!

குஜராத்தில் ஏற்பட்ட தீ விபத்தின் சோகச் சுவடுகள் மறைவதற்குள், தலைநகர் தில்லியில் குழந்தைகள் மருத்துவமனை ஒன்றில் தீ விபத்து நேரிட்டது. இதில் 9 பச்சிளம் குழந்தைகள் தீயில் சிக்கி உயிரிழந்தன. 

கிழக்கு தில்லியின் விவேக் விகார் பகுதியில் உள்ள பேபி கேர் குழந்தைகள் மருத்துவமனையில் சனிக்கிழமை இரவு 11.30 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. உடனடியாக தில்லி தீயணைப்புப் படையினருக்குத் தெரிவிக்கப்பட்டது.

ஒன்பது தீயணைப்பு வண்டிகளில் சம்பவ இடத்துக்கு விரைந்த படையினர் தீயை அணைப்பதில் ஈடுட்டனர். மருத்துவமனைக்குள் இருந்த 12 குழந்தைகளை அவர்கள் மீட்டுக் கொண்டுவந்தனர்.

ஒன்பது பச்சிளம் குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்தது, மருத்துவமனையில் இருந்தோர் நெஞ்சைப் பிழியவைத்தது. 

காப்பாற்றப்பட்ட குழந்தைகள் அருகில் உள்ள மருத்துவமனைகளுக்கு மாற்றப்பட்டனர். 

தகவல் அறிந்ததும் தலைமறைவான மருத்துவமனையின் உரிமையாளர் டாக்டர் நவீனை, தில்லி காவல்துறையினர் நேற்று இரவு பிடித்து விசாரித்துவருகின்றனர். அவர் மீது பல்வேறு பிரிவுகளின்படி வழக்குகள் பதியப்பட்டுள்ளன. 

தீயணைப்பு வசதிக்கான சான்று அந்த மருத்துவமனையிடம் இருக்கிறதா என்றும் காவல்துறையினர் விசாரித்துவருகின்றனர். 

குடியரசுத் தலைவர், பிரதமர் உட்பட்ட பலரும் சம்பவத்துக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.  

logo
Andhimazhai
www.andhimazhai.com