அசாமில் சீட் கிடைக்காததால் விம்மி அழுத பா.ஜ.க. நிர்வாகி!

அசாமில் சீட் கிடைக்காததால் விம்மி அழுத பா.ஜ.க. நிர்வாகி!

Published on

அசாம் சட்டப்பேரவைக்கும் அடுத்த மாதம் தேர்தல் நடைபெறும் நிலையில், முதலமைச்சர் ஹிமந்த பிஸ்வா சர்மா உட்பட்ட பா.ஜ.க. வேட்பாளர் பட்டியல் இன்று வெளியிடப்பட்டது. மற்ற கட்சிகளும் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு வருகின்றன.

வாய்ப்பு கிடைக்காதவர்கள் பரஸ்பரம் மாற்று கட்சிகளில் சேர்வதும் குற்றஞ்சாட்டுவதுமாக காட்சிகள் படுஜோராக இருக்கின்றன.

இந்நிலையில், பா.ஜ.க.வின் வேட்பாளர் பட்டியலில் இடம்பிடிக்க முடியாத ஒருவர் கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் விம்மி விம்மி அனைவரின் முன்னிலையிலும் அழுது ஆர்ப்பாட்டம் செய்துவிட்டார்.

போங்காய்கான் மாவட்டம், வடக்கு சல்மாரா பகுதியில் இன்று நடைபெற்ற பா.ஜ.க. நிகழ்ச்சியில்தான் இந்த சம்பவம் நிகழ்ந்தது.

பன்னிரண்டு ஆண்டுகளாகக் கட்சிக்காகப் பாடுபட்டதாகக் கூறி, சஞ்சய் ராய் என்பவர் கட்சியினர் திரண்டிருந்த கூட்டத்தில் கட்டுப்படுத்த முடியாதபடி சொல்லிச் சொல்லி அழுதார். அவரைத் தேற்ற முயன்ற ஆதரவாளர்களும் ஒரு கட்டத்தில் இயலாமல் போய், தாங்களும் அழத் தொடங்கினார்கள்.

இந்த நிகழ்வு அந்த மாநிலத்தில் பெரிய கவனத்தை ஈர்த்துள்ளது.

logo
Andhimazhai
www.andhimazhai.com