பிரஜ்வால்
பிரஜ்வால்

பிரஜ்வால் பாலியல் விவகாரம்: வாய்திறந்த தேவ கவுடா!

கர்நாடக மாநிலத்தில் நிகழ்ந்த பாலினக் கொடுமை விவகாரத்தில் சிக்கிய பா.ஜ.க. கூட்டணி எம்.பி. பிரஜ்வாலின் தாத்தாவும் முன்னாள் பிரதமருமான தேவகவுடா முதல் முறையாக இதைப் பற்றி வாய்திறந்துள்ளார். 

தன்னுடைய 91ஆவது பிறந்த நாளை முன்னிட்டு தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த அவர், இதில் நிறைய பேர் சம்பந்தப்பட்டிருக்கின்றனர் என்றும் அவர்கள் அனைவரின் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் கூறினார். 

பிரஜ்வால் மீது நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று கூறிய அவர், தன் மகனும் முன்னாள் அமைச்சருமான ரேவண்ணாவுக்கு என்ன நடக்கிறது என்பதைப் பொதுமக்களே அறிவார்கள் என்பதுடன் நிறுத்திக்கொண்டார். 

வீட்டுப் பணியாளர் உட்பட பல பெண்களை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியதாக ரேவண்ணாவின் மகன் பிரஜ்வால் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது. பிரஜ்வாலால் பாதிக்கப்பட்ட ஒரு பெண்ணைக் கடத்தியதாக ரேவண்ணா இந்த மாதத் தொடக்கத்தில் கைதுசெய்யப்பட்டார். 

கர்நாடக மாநில சிறப்புப் புலனாய்வுக் குழு இதை விசாரித்துவருகிறது. ரேவண்ணா அண்மையில் பிணையில் விடுவிக்கப்பட்டார் என்பது தெரிந்ததே! 

logo
Andhimazhai
www.andhimazhai.com