சாலையோரக் கடையில் தேநீர் குடித்த பில்கேட்ஸ்! – வைரலாகும் வீடியோ!
இந்தியா வந்திருக்கும் மைக்ரோசாஃப்ட் நிறுவனர் பில் கேட்ஸ், நாக்பூர் சாலையோர கடையில் தேநீர் குடித்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகியிருக்கிறது.
இந்தியாவின் முன்னணி பணக்காரர்களில் ஒருவரான முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானியின் திருமண விழாவில் பங்கேற்பதற்காக மைக்ரோசாஃப்ட் நிறுவனர் பில் கேட்ஸ் இந்தியா வந்துள்ளார். அவர் நாக்பூரில் சாலையோர தேநீர் கடை வைத்திருக்கும் ‘டோலி சாய்வாலா’ என்ற யூட்யூப் பிரபலத்தின் கடைக்குச் சென்றார். தனது கடைக்கு வந்திருப்பவர் பில் கேட்ஸ் என்றோ, அவர் உலகப் பணக்காரர்களில் ஒருவர் என்றோ டோலி சாய்வாலாவுக்குத் தெரிந்திருக்கவில்லை.
சாய்வாலாவில் டீ குடித்த வீடியோவை தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ள பில்கேட்ஸ், இந்தியாவில் திரும்புகிற திசை எங்கும் புதுமையைக் காணலாம் என்றும், அதில் ஒன்றுதான் இந்தத் தேநீர் தயாரிப்பு என்றும் கூறியுள்ளார்.
பிறகு என்ன, பில்கேட்ஸ் டீ குடித்த டோலி சாய்வாலாவை நோக்கி எடுக்க ஊடகங்கள் படையெடுக்கத் தொடங்கியுள்ளன.
தனித்துவமான ஸ்டைலில் தேநீர் போடுவதில் வல்லவரான டோலி சாய்வாலா, மிகவும் ருசியான, இஞ்சி, ஏலக்காய் தட்டி அருமையான தேநீர் தயாரிப்பாளர். இதற்காகவே அவர் பிரபலமானார்.