பிரதமர் மோடி
பிரதமர் மோடி

அயோத்திக்கு 22ஆம் தேதி வந்துடாதீங்க - மோடி கைகூப்பி வேண்டுகோள்!

அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழாவிற்கு மக்கள் வர வேண்டாம் என பிரதமர் மோடி கேட்டுக்கொண்டுள்ளார்.

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட அயோத்தியில் ராமர் கோயிலின் திறப்பு விழா ஜனவரி 22ஆம் தேதி நடைபெற உள்ளது. கோயில் திறப்பு விழாவின்போது, கோயிலின் கருவறையில் ராமர் சிலையை பிரதமர் மோடி நிறுவ உள்ளார். இந்த நிகழ்வில் பல முக்கிய தலைவர்கள், சினிமா பிரபலங்கள், தொழிலதிபர்கள் உட்படப் பலரும் கலந்துகொள்ள உள்ளனர்.

இந்த நிலையில், அயோத்தியில் புதுப்பிக்கப்பட்ட ரயில் நிலையம், புதிய விமான நிலையத்தைப் பிரதமர் மோடி நேற்று திறந்து வைத்து பொதுக்கூட்டத்தில் பேசினார்.

அப்போது, "ஜனவரி 22ஆம் தேதி கும்பாபிஷேகம் நடக்கும் போது அனைவரும் அயோத்திக்கு வர வேண்டும் என்று ஆசைப்படுகிறார்கள். ஆனால் அனைவராலும் ஒரே நேரத்தில் வர முடியாது என்பது உங்களுக்குத் தெரியும். ஜனவரி 22ஆம் தேதி தங்கள் வீடுகளில் தீபங்களை ஏற்றி கொண்டாடுங்கள். அந்த நாளை தீபாவளியாக கொண்டாடுங்கள். ராமரின் பக்தர்கள் தெய்வத்திற்கு இடையூறு விளைவிக்கக் கூடாது. பொறுமையாகக் காத்திருக்க வேண்டும். நாங்கள் ஏற்கனவே 550 ஆண்டுகள் காத்திருந்தோம், தயவுசெய்து இன்னும் சில நாட்கள் காத்திருக்கவும்" என்று பிரதமர் மோடி கூறினார்.

மேலும், “உலகில் எந்த நாடாக இருந்தாலும், வளர்ச்சியில் புதிய உச்சத்தை எட்டவேண்டும் என்றால், அது தனது பாரம்பரியத்தைப் பேணவேண்டும். சின்ன கூடாரத்தில் ராம் லாலா (குழந்தை ராமர் சிலை) இருந்தது. இன்று, ராம் லாலாவுக்கு மட்டுமல்ல, நாட்டின் 4 கோடி ஏழைகளுக்கும் வீடு வழங்கப்பட்டுள்ளது. அயோத்தியின் வளர்ச்சி இங்குள்ள மக்களுக்கு புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கும்.” என்றும் மோடி கூறினார்.

logo
Andhimazhai
www.andhimazhai.com