ஹேமந்த் சோரன்
ஹேமந்த் சோரன்

தரந்தாழ்ந்த வீழ்ச்சி… ஹேமந்த் சோரன் கைதுக்கு முதல்வர் ஸ்டாலின் கண்டனம்!

ஜார்க்கண்ட் முதலமைச்சர் ஹேமந்த் சோரன் கைதுக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக முதல்வர் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:

“ஜார்க்கண்ட் முதலமைச்சர் ஹேமந்த் சோரன் அவர்களைக் கைது செய்துள்ளது ஒன்றிய பா.ஜ.க அரசின் அப்பட்டமான அரசியல் பழிவாங்கல் நடவடிக்கை ஆகும்.

பழங்குடியினத்தைச் சேர்ந்த தலைவர் மீது இப்படி விசாரணை அமைப்புகளை ஏவியிருப்பது அரசியலில் மற்றுமொரு தரந்தாழ்ந்த வீழ்ச்சி.

பா.ஜ.க.வின் பதற்றத்தையும் அதிகார அத்துமீறலையுமே இது காட்டுகிறது.

இத்தகைய அசிங்கமான அரசியலால் எதிர்க்கட்சிகளின் குரலை அடக்கிட முடியாது.

பா.ஜ.க.வின் காழ்ப்புணர்ச்சி அரசியலை உறுதியுடன் எதிர்கொண்டு, அவர்களுக்கு அடிபணிய மறுத்துள்ளார் ஹேமந்த் சோரன் அவர்கள்.

சோதனைகளில் துவளாமல், பா.ஜ.க.வின் மிரட்டல் உத்திகளுக்கு எதிராக அவர் காட்டியுள்ள இந்த நெஞ்சுரம் அனைவருக்கும் ஊக்கமளிக்கும் ஒன்று!” என்று முதலமைச்சரின் பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

logo
Andhimazhai
www.andhimazhai.com