‘நாட்டில் உணவு தானிய உற்பத்தி பாதிக்கும்’

Production may get affected
உற்பத்தி பாதிக்க வாய்ப்பு
Published on: 

'எல் நினோ' பாதிப்பால் ஏற்படும் வானிலை மாற்றம், உணவு தானிய உற்பத்தியை பாதிக்க வாய்ப்பு இருப்பதாக மத்திய வேளாண்துறை செயலாளர் ஆதிஷ் சந்திரா தெரிவித்துள்ளார்.

டெல்லியில் நடைபெற்று வரும் தேசிய மாநாட்டில், மத்திய வேளாண்துறை செயலாளர் ஆதிஷ் சந்திரா கூறியதாவது:

"கடந்த கால குறுவைப் பருவத்தில், மழையை நம்பி சாகுபடி செய்யும் பகுதிகளில், மிகவும் சவாலானதாக இருந்தது. பல மாநிலங்கள் முதலில் பயிர் பரவலை அடைவதற்கும், பின்னர் பயிர்கள் தப்பிப் பிழைப்பதை உறுதி செய்வதற்கும் போராடின. கோதுமை, கடுகு போன்ற சம்பா பயிர்களின் விதைப்பு அக்டோபர் மாதம் தொடங்குகிறது.

வரவிருக்கும் இந்த பருவத்தில், உற்பத்தி பெருமளவில் பாதிக்கப்பட வாய்ப்பிருக்கிறது.

குறுவையை போல சம்பா பருவமும் மழையை நம்பி சாகுபடி செய்யும் பகுதிகளுக்கு சவாலாக இருக்கும். சில மாநிலங்கள் அதிகப்படியான மண் ஈரப்பதத்தால் சிக்கல் ஏற்படக்கூடும்.

அதே நேரத்தில் மழைப்பொழிவு குறைவாக உள்ள பகுதிகள் நீண்ட காலத்துக்கு அழுத்தத்தை சந்திக்க நேரிடலாம். எல் நினோ வானிலை, வரவிருக்கும் பருவ மழையை நம்பி சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு பெரும் சவாலாக அமையலாம். இதனால் உணவு தானிய உற்பத்தி பாதிக்கப்படலாம்.

எனவே சம்பா பருவத்துக்கு ஏற்ப உத்திகள் வகுக்கப்பட வேண்டும். பருவநிலை மாற்றம் என்பது ஒரு யதார்த்தம். பல இடங்களில் பாசனப் பகுதிகளிலும் கூட பருவம் தவறி கனமழை பெய்து, பயிர்கள் பாதிக்கப்பட்டன. பருவநிலை மாற்றங்கள் தற்போது அதிவேகமாக நிகழ்கின்றன.

தானிய உற்பத்தியில் இந்தியா தன்னிறைவு அடைந்திருந்தாலும், பருப்பு வகைகள், எண்ணெய் வித்துக்கள், பழங்கள் போன்ற சில தோட்டக்கலைப் பொருட்களைத் தொடர்ந்து இறக்குமதியே செய்கிறது. இதிலும் நாம் தன்னிறைவு அடைய வேண்டும்.

விவசாயிகள் நீடித்த வேளாண்மையுடன் கைகோர்த்துச் செல்ல வேண்டும். விவசாயிகளின் வருமானத்தை மேம்படுத்த மாநிலங்கள் உதவ வேண்டும்.

விவசாய இழப்புகளை குறைக்க உட்கட்டமைப்பை நவீனமயமாக்க வேண்டியது அவசியம். பழங்கள், காய்கறிகளுக்கு கொள்முதல் முறை எதுவும் இல்லை. இவற்றை மேம்படுத்த வேண்டும்."

இவ்வாறு அவர் கூறினார்.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடர: Facebook, Twitter, Youtube, Instagram

logo
Andhimazhai
www.andhimazhai.com