நேற்றிரவு முதல் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான நிறுவனத்தின் ஊழியர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் 70க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
சுமார் 300-க்கும் மேற்பட்ட ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான நிறுவன ஊழியர்கள் ஒரே நேரத்தில் விடுப்பு எடுத்ததல் அந்த நிறுவனத்தின் விமான சேவை பாதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக உள்நாடு மற்றும் வெளிநாடு என 79 விமானப் பயணங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
தங்களுக்கு உடல்நிலை சரியில்லை என சொல்லி 300க்கும் அதிகமான ஊழியர்கள் விடுப்பு எடுத்துள்ளனர். அதோடு தங்களது மொபைல் போன்களையும் ஸ்விட்ச் ஆஃப் செய்து வைத்துள்ளதாக கூறப்படுகிறது.
இதற்கு காரணம் நிறுவனத்தின் தரப்பில் வேலை நிமித்தமாக கொண்டுவரப்பட்ட புதிய விதிமுறை மாற்றங்கள் என சொல்லப்படுகிறது.
மேலும், ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான நிறுவனம் ஊழியர்களை நடத்தும் முறையில் சமத்துவம் இல்லை ஊழியர்கள் குற்றச்சாட்டு வைத்துள்ளனர். இழப்பீடு சார்ந்து முக்கிய தொகுப்பில் பெரிய மாற்றங்கள் செய்துள்ளதாகவும் ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.