7 மாதங்களுக்குப் பின்... விண்ணில் ஏவப்பட்டது இ.ஓ.எஸ்.–05 செயற்கைக்கோள் வெற்றி!

EOS - 05 Satellite
இ. ஓ. எஸ். – 05 செயற்கைக்கோள்
Published on

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) இன்று அதிகாலை எஸ்.எல்.வி - எஃப் 17 ஏவுகலனை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது.

ஆந்திரப் பிரதேசத்தின் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தின் இரண்டாவது ஏவுதளத்திலிருந்து, அதிகாலை 2.55 மணிக்கு இ. ஓ. எஸ். – 05 என்ற புவி கண்காணிப்பு செயற்கைக்கோளுடன் இந்த ஏவுகலன் புறப்பட்டது.

இதைதொடர்ந்து, 18 நிமிடங்களுக்குப் பிறகு, இ. ஓ. எஸ். – 05 செயற்கைக்கோள் திட்டமிட்ட புவியிணக்கச் சுற்றுப்பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டது.

இந்தச் செயற்கைக்கோள் விண்வெளியிலிருந்து பூமியை தொடர்ந்து கண்காணித்து, படங்களை அனுப்பும்.

இந்தச் செயற்கைக்கோளின் உதவியுடன் பரந்த அளவில் நிலப்பரப்பைப் படம் பிடிக்க முடியும்.

கடந்த ஜனவரி மாதம் இஸ்ரோ விண்ணில் செலுத்திய ஏவுகணை தோல்வியில் முடிந்த நிலையில், தற்போது 7 மாத இடைவேளைக்குப் பிறகு செயற்கைக்கோளுடன் கூடிய ஏவுகணையை இன்று வெற்றிகரமாக விண்ணில் செலுத்தி சாதனை படைத்துள்ளது. 

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram

logo
Andhimazhai
www.andhimazhai.com