அமித் ஷா
அமித் ஷா

போராட்டத்தில் விவசாயி பலி : அமித்ஷா அவசர ஆலோசனை!

புதுடெல்லி விவசாயிகள் போராட்டம் தீவிரமடைந்துள்ள நிலையில், பஞ்சாப்ப்பைச் சேர்ந்த கியான் சிங் எனும் 65 வயது விவசாயி கண்ணீர்ப் புகை குண்டால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். முன்னதாக, நேற்றுவரை மூன்று பேருக்கு கண் பார்வை பறிபோய்விட்டது.

இந்த நிலையில், டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று அவசர ஆலோசனையில் ஈடுபட்டார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் உணவுத் துறை அமைச்சர் பியூஸ் கோயல், வேளாண் துறை அமைச்சர் அர்ஜுன் முண்டா ஆகியோர் கலந்து கொண்டனர்.

நேற்று விவசாய சங்க பிரதிநிதிகளுடன் நடைபெற்ற 3ஆம் கட்டப் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்த நிலையில், இந்த அவசர ஆலோசனைக் கூட்டத்தில் மத்திய அமைச்சர்களுடன் பல்வேறு துறைகளின் செயலாளர்களும் பங்கேற்றனர்.

விவசாயிகள் போராட்டம் நான்காவது நாளாக இன்றும் நடைபெற்று வரும் நிலையில், இந்த கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டிருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதேபோல், நாளை மறுநாள் மீண்டும் விவசாய சங்க பிரதிநிதிகளுடன் மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்த உள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com