தமிழக விவசாயிகள் நாக்பூரில் தடுத்துநிறுத்தம்!

Farmers went for protest in delhi
தில்லிக்கு போராட்டம் நடத்த சென்ற விவசாயிகள்
Published on

தில்லியில் போராட்டம் நடத்தச்சென்ற விவசாயிகள் பாதி வழியிலேயே தடுத்து நிறுத்தப்பட்டு, திருப்பி அனுப்பப்பட்டனர்.

கர்நாடக அரசின் மேகதாது அணை கட்டும் முயற்சி, காவிரி நீர் உரிமை, மத்திய நீர்வள அமைச்சகத்தின் ஒரு சார்பான நிலைப்பாடு ஆகியவற்றை முன்வைத்து, காவிரி டெல்டா பாசன விவசாயிகள் மத்திய நீர்வள அமைச்சகத்தை முற்றுகையிட தில்லிக்குப் புறப்பட்டனர்.

அதன்படி, ரயிலில் தில்லிக்குப் புறப்பட்ட விவசாயிகளை, மகாராஷ்டிர மாநிலம் நாக்பூர் ரயில் நிலையத்தில் வழிமறித்த அந்த மாநில போலீசார், அவர்களை தமிழகத்திற்குத் திருப்பி அனுப்பி வைத்தனர்.

இந்த செயல் ஜனநாயக உரிமைக்கு எதிரானது என்று உதயநிதி, வேல்முருகன் உட்பட பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்களும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram

logo
Andhimazhai
www.andhimazhai.com