2 நாள்களில் ரூ. 24,000 கோடி - ஆன்லைன் விற்பனை அமோகம்!

Festive season online shopping
பண்டிகைக் கால ஆன்லைன் விற்பனை
Published on: 

இந்தியாவில் பண்டிகைக் கால விற்பனை தொடங்கிய இரண்டு நாள்களில் ரூ. 24,000 கோடி மதிப்பிலான பொருட்கள் விற்பனையாகியுள்ளன.

இந்தியாவில் ஆயுத பூஜை, தசரா, தீபாவளி என்று தொடர்ந்து பண்டிகைகள் வரவுள்ளதால், பல்வேறு பிரபல ஆன்லைன் விற்பனைத் தளங்கள், தள்ளுபடியுடன் கூடிய விற்பனையைத் தொடங்கி உள்ளன.

இந்நிலையில், பண்டிகைக் கால விற்பனை தொடங்கிய 2 நாள்களில், பிளிப்கார்ட், அமேசான், மீஷோ உட்பட்ட தளங்களில், 8 முதல் 9 கோடி ஆர்டர்கள் செய்யப்பட்டுள்ளதாகவும், அதில் ரூ. 24,000 கோடி விற்பனையுள்ளதாகவும் ரெட்சீர் கன்சல்டன்ட்ஸ் என்ற நிறுவனத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முந்தைய ஆண்டுகளைவிட, நடப்பு ஆண்டில் 21 - 25% விற்பனை அதிகமாக உள்ளதாக அந்நிறுவனம் கூறியுள்ளது. இந்த விற்பனை வழக்கமான தினசரி வணிக வீதத்தைவிட ஆறு மடங்கு அதிகமாகியுள்ளது.

இருப்பினும், வழக்கமாக அதிகமாக விற்பனையாகும் மொபைல் போன்கள், முதன்முறையாக 50% குறைவாக விற்பனையாகும் என்ற கணிப்பையும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடர: Facebook, Twitter, Youtube, Instagram

logo
Andhimazhai
www.andhimazhai.com