அரசுப் பணியாளர் தேர்வாணைய தலைவர் மீது வழக்கு பதிவு!

Kerala Public service Commission
கேரள அரசுப் பணியாளர் தேர்வாணையம்
Published on: 

கேரளத்தில் மீன்வள விரிவாக்க அலுவலர் பதவிக்கான தேர்வில் முறைகேடுகள் நடைபெற்றதாக கேரள அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் தலைவர், உறுப்பினர்கள் மீது கேரள குற்றவியல் பிரிவு காவல்துறை முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்துள்ளது.

அண்மையில், கேரள மீன்வளம் ஆய்வுகள் - கடல்சார் பல்கலைக்கழகத்தில் உள்ள மீன்வள விரிவாக்க அலுவலர் பதவிக்கான தேர்வு நடைபெற்றது. இந்தத் தேர்வில் முறைகேடுகள் நடந்துள்ளதாகப் புகார்கள் எழுந்தன. இதுகுறித்து விசாரணை நடத்திய கேரள குற்றவியல் போலீஸ் பிரிவினர், தேர்வில் நடைபெற்றதாகக் கூறப்படும் முறைகேடுகளை உறுதி செய்தனர்.

அதைத் தொடர்ந்து, கேரள அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் தலைவர், உறுப்பினர்கள், அலுவலர்கள் மீது முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இதேபோல, உதவி மோட்டார் வாகன ஆய்வாளர் பதவிக்காக நடத்தப்பட்ட தேர்விலும் முறைகேடுகள் நடைபெற்றதாக, தேர்வாணையத்தின் தலைவர், உறுப்பினர்கள், அலுவலர்கள் மீது மற்றொரு முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடர: Facebook, Twitter, Youtube, Instagram