மெட்டாவின் இந்தியத் தலைவர் மீது வழக்குப்பதிவு!

FIR Registered on Meta head of India
இந்தியாவின் மெட்டா தலைவர் மீது வழக்குப்பதிவு
Published on

மெட்டா நிறுவனத்தின் இந்தியத் தலைவரான அருண் சீனிவாசன் மீது ஹைதராபாத் போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

பிரதமர் நரேந்திர மோடியை கேலி செய்யும் விதமான படங்கள், வீடியோக்கள் மெட்டா நிறுவனத்தின் கீழ் இயங்கும் முகநூல், இன்ஸ்டாகிராம் பக்கங்களில் பரவியதற்காக, அவர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளது.

இவற்றில், சில வீடியோக்கள் ஏஐ மூலம் உருவாக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஏஐ உதவியுடன் திருத்திப் பரப்பப்படும் வீடியோக்களை மெட்டா நிறுவனம் எவ்வாறு கண்டறிகிறது என்பது பற்றியும், அவ்வாறு கண்டுபிடிக்கப்படும் போலி வீடியோக்களை சமூக ஊடகத் தளத்திலிருந்து நீக்குவதற்கு எந்த மாதிரியான பாதுகாப்பு அம்சங்களை மெட்டா கையாளும் என்பது குறித்தும் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதிலளிக்குமாறு ஹைதராபாத் சைபர் குற்றப்பிரிவு போலீஸார் மெட்டா நிறுவனத்திடம் கேட்டுள்ளனர்.

மேலும், இதைப்போல அவதூறுகளைப் பரப்பும் வகையிலான வீடியோக்களை உருவாக்கியது யார் என்பது தொடர்பான தீவிர விசாரணை நடந்துவருவதாக ஹைதராபாத் சைபர் குற்றப்பிரிவு போலீஸார் தெரிவித்துள்ளனர்.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram

logo
Andhimazhai
www.andhimazhai.com