முன்னாள் துணை முதல்வர் மீது துப்பாக்கிச் சூடு... பஞ்சாபில்!

attack on Punjab former CM Badal
பஞ்சாப் முன்னாள் துணை முதலமைச்சர் பாதல் மீது துப்பாக்கிச் சூடு
Published on

பஞ்சாப் துணை முதலமைச்சராக இருந்த சிரோன்மணி அகாலி தளம் தலைவர் சுக்பிந்தர் சிங் பாதல் மீது இன்று காலையில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. நல்வாய்ப்பாக அவர் உயிர்தப்பினார். 

அமிர்தசரஸ் பொற்கோயிலில் சீக்கிய மத அமைப்பின் தண்டனைப்படி அவர் இன்று கோயில் வாயிற்காப்பாளராக இருப்பதற்காக அங்கு சென்றிருந்தார். வாகனத்தில் வந்த அவர் சக்கர நாற்காலியில் கோயில் வாயிலின் முன் அமர்ந்திருந்தார். அவருக்குப் பக்கவாட்டில் சிலர் பாதுகாப்பாகவும் உதவியாகவும் இருந்தனர்.

அப்போது திடீரென எதிர்ப் பக்கமிருந்து அவரை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. இதனால் அங்கிருந்தவர்கள் சிதறி ஓடினார்கள். சுக்பிந்தர் சிங் பாதலுக்கு அருகில் இருந்தவர்கள் அவருக்கு அரணாக நின்றுகொண்டனர்.

உடனே அவரைப் பாதுகாப்பான இடத்துக்குக் கூட்டிச்ச்சென்றனர்.

பப்பர் கல்சா கிளர்ச்சி இயக்கத்தின் முன்னாள் உறுப்பினர் நரைன் சிங் சௌரா என்பவரே சூட்டுத் தாக்குதலில் ஈடுபட்டுள்ளார். அவரைக் காவல்துறையினர் உடனடியாகக் கைதுசெய்தனர்.

அவர் மீது அமிர்தசரஸ், தரன் தரான், ரோப்பர் ஆகிய மாவட்டங்களில் வழக்குகள் உள்ளன. ஏற்கெனவே இவர் பஞ்சாபில் சிறையில் அடைக்கப்பட்டிருந்திருக்கிறார்.

logo
Andhimazhai
www.andhimazhai.com