கிரண் ரிஜ்ஜு
கிரண் ரிஜ்ஜு

24ஆம் தேதி தொடங்கும் நாடாளுமன்ற கூட்டத் தொடர்!

18ஆவது நாடாளுமன்றத்தின் முதல் கூட்டத்தொடர் வரும் 24ஆம் தேதி தொடங்கும் என்று நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜ்ஜு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது:

18ஆவது நாடாளுமன்ற மக்களவையின் முதல் கூட்டத் தொடர் வருகிற 24ஆம் தேதி முதல் அடுத்த மாதம் ஜூலை 3ஆம் வரை நடக்கிறது. புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.பி.க்கள் பதவி ஏற்பு, சபாநாயகர் தேர்தல், ஜனாதிபதி உரை - விவாதம் இந்த கூட்டத்தொடரில் நடைபெறும்.

கூட்டத் தொடரின் முதல் 3 நாட்கள் புதிய எம்.பி.க்.களின் பதவியேற்பு விழா நடைபெறும். அதேபோல் சபாநாயகர் தேர்வும் நடைபெறும்.

தொடர்ந்து, குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் ஜூன் 27ஆம் தேதி அன்று உரையாற்ற உள்ளார்.

குடியரசுத் தலைவர் உரைக்குப் பிறகு பிரதமர் மோடி தனது அமைச்சரவையை நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தும் நிகழ்வு நடைபெறும். குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் நடைபெறும். இதனையடுத்து நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் பிரதமர் பதில் அளிக்கும் நிகழ்வும் நடைபெறும். தொடர்ந்து கூட்டத்தொடர் ஜூலை 3ஆம் தேதி நிறைவடைகிறது.” என்று கிரண் ரிஜ்ஜு பதிவிட்டுள்ளார்.

logo
Andhimazhai
www.andhimazhai.com